எனது மகள் அர்ரஹ்மான் பள்ளியில் சேர்ந்த பிறகு அவளிடம் நிறைய முன்னேற்றங்களை காண்கிறேன். அவளிடம் தற்பொழுது எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறமையும், வெற்றியோ தோல்வியோ துணிந்து செய்வேன் என்ற தன்னம்பிக்கை எண்ணம் வளர்ந்திருப்பதைக் கண்டு வியக்கிறேன். புரியாமல் மனப்பாடம் செய்யும் முறையை தவிர்த்து புரிந்து படிதல் என்ற முறையை மணவர்களிடம் ஆசிரியர்கள் ஊக்குவித்து முன்னேற்றம் கொண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் மீதும் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர்.
பள்ளியில் சேர்த்த சிறிது நாட்களிலேயே அவளை தமிழ் மற்றும் அரபியில் நன்கு வாசிக்கவும் எழுதவும் .நன்கு பயிற்சியளித்துள்ளீர்கள். கணித வாய்ப்பாடுகளை வேகமாகவும் பிழையின்றியும் சொல்கிறாள். SPELL BEE பயிற்சித்தாளில் இருக்கக்கூடிய வார்த்தைகளை தினமும் வாசித்து பயிற்சி பெற்று, அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்த துவங்கி உள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! பள்ளியில் சேர்த்ததிலிருந்து இது வரைக்கும் நல்ல விதமான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் மட்டுமே கண்டுள்ளோம்.
ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஆசிரியர்கள் தனிக்கவனமும், அக்கறையும் செலுத்துகின்றனர். பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கின்றனர். எனது குழந்தைகளிடம் படிப்பிலும், ஆங்கிலம் பேசுவதிலும் முன்னேற்றம் காண்கிறேன். பள்ளியில் கொடுக்கப்படும் அனைத்து ஒப்படைப்புகளும் மாணவர்களின் அறிவை அதிகப்படுத்துமாறு உள்ளது. மதிப்பெண்ணிற்கு மட்டும் முக்கியதுவம் என்றில்லாமல் தனித்திறமைகளுக்கும் முக்கியதுவம் தருகிறது அர்ரஹ்மான் பள்ளி.
எனது மகன் கணித பாடத்தில் அதிகமான ஆர்வம் காட்டிவருகிறான். ஒவ்வொரு வாரமும் வழங்கப்பட்டு வரும் கணித பயிற்சித் தாள்களை பிழையின்றி வேகமாக முடித்துவிடுகிறான். மாணவர்களின் திறன்களை அறிந்து அத்திறன்களை மேம்படுத்தி போட்டிகளில் பங்கேற்க அர்ரஹ்மான் பள்ளியானது ஊக்கப்படுத்துகிறது. மிட்பிரைன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது
விடுமுறைகளில் கொடுக்கப்படும் எந்த ஒப்படைப்புகளாக இருந்தாலும் அதற்கான விடைகளை இணையதளங்களில் தேடி ஆங்கிலத்தில் உள்ள கருத்துக்களை வாசித்து அதனை புரிந்து கொண்டு சரியாக எழுதுகிறான். அவர்களுடைய INTERNET SKILLஐ மேம்படுத்தும் விதமான ஒப்படைப்புகளை வழங்குகிறீர்கள். கணித பாடத்தை மிகுந்த ஆர்வமுடனும் வேகமாகவும் செய்கிறான். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உள்ள புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை சரளமாக வாசிக்கிறான்.
யாஸ்மின் இல்லத்தரசி
கொட்டாம்பட்டி