மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களான அரிசி , கஞ்சி, ஜவ்வரிசி, சாதம் இந்த நான்கு பொருள்களை கொண்டு சுற்றுசுழலுக்கு மாசு தாராத வகையில் எளிதில் மக்ககூடிய நெகிழியை (Plastic) ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.இந்த ஆராய்ச்சிக்காக இவருக்கு மாநில அளவில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.
PDF Downloadஇந்த மாணவர் 2020 ஆம் ஆண்டும் தனது புதிய ஆராய்ச்சியாக அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தும் பாத்திரங்களில் இருக்கும் கிருமிகளை அழிப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதற்காக அவர் மரக்கரியிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பல் மற்றும் செம்மண் ஆகியவற்றை கொண்டு சோதித்தார். பிறகு இக்காலத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களான விம் சோப்பு, விம் ஜெல் ஆகியவற்றைக் கொண்டும் ஆராய்ச்சி செய்தார். இரண்டையும் ஒப்புமைப்படுத்தி எது விரைவில் பாத்திரத்தில் உள்ள நுண்ணியிரி கிருமிகளை அழிக்கிறது என்ற ஆராய்ச்சி மேற்க்கொண்டார். இவ்வாராய்ச்சிக்காக இவர் தேசிய அளவில் நடந்த அறிவியல் ஆராய்ச்சில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்..
வளர்ந்து வளரும் கால கட்டத்தில் மாசு இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தண்ணீரில் உருவாகும் பாசிகளின் மூலம் எரி பொருள் கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சியை மேற்கொண்டார். தனது ஆராய்ச்சில் ஆறு விதமான தண்ணீர் அதாவது சுத்தமான நீர், சோப்புத் தண்ணீர், மீன்தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர், அருவி நீர், அணை தண்ணீர், கடல் நீர் ஆகியவற்றில் பாசிகள் போட்டு எந்த தண்ணீரில் பாசிகள் வேகமாக வளரும் என்பதை ஆராய்ந்து அவற்றை எரிபொருள்களாக பயன்படுத்தலாம் என்பதையும் கண்டுபிடித்தார். தேசிய அளவில் இவருடைய ஆராய்ச்சிக்காக மூன்றாம் இடத்தை வெற்றிகரமாக பிடித்துள்ளார்.
PDF Download2020ம் ஆண்டும் இந்த மாணவர் மற்றுமொரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். விலங்குகளின் எச்சில்களில் கிருமிகளைக் கொல்லும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதை ஆராய்ந்தார். அதற்காக அவர் நாய், பூனை, ஆடு, மாடு மற்றும் மனிதர்களில் 8, 9 மற்றும் 33 வயது உள்ளவர்களையும் ஆராய்ந்து நோய் எதிர்ப்பு சக்தி யாரிடம் உள்ளது என்பதையும் கண்டுபிடித்தார். இவர் தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சிப்போட்டியில் பங்கேற்றார்.
செயற்கை உரங்களின் மூலம் மண்வளம் குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் ஆராய்ச்சியை நம் பள்ளி மாணவர் மேற்கொண்டார். இதற்காக அவர் வாழைப்பழக்கழிவுகளில் இருந்து சைவ இயற்கை உரமும், மீன் கழிவுகளில் இருந்து அசைவ இயற்கை உரமும் உருவாக்கி அவற்றில் எந்த உரத்தில் மண்புழுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது என்பதை ஆராய்ச்சி செய்தார். பிறகு அவற்றுள் சிறுவிதைகள் போட்டு எதில் வேகமாக செடிகள் வளர்கிறது என்று சோதித்த போது சைவ உரம் (வாழைப்பழக்கழிவுகள்) மற்றும் அசைவ உரம் (மீன்கழிவுகள்) இரண்டும் சேர்த்து தாயாரிக்கப்பட்ட உரத்தில் செடிகள் வேகமாக வளர்வதாக கண்டுபிடித்தார்.
PDF Downloadஇந்த ஆண்டும், எந்த உலோகம் விமானத்தில் அதிக உந்து சக்தியை உருவாக்குகிறது என்பதற்கான ஆராய்ச்சியில் இந்த மாணவர் ஈடுபட்டார். அதற்காக இவர் காப்பர் , அலுமினியம் , பித்தலை போனற வெவ்வேறு உலோகங்களை பயன்படுத்தி விமானம் மற்றும் கப்பல்களில் உந்து சக்திக்காக பயன்படுத்தும் PROPPELER களை வடிவமைத்து அதனை பொம்மைக்கார் ஒன்றில் பொருத்தி சோதித்ததில் அலுமினியம் அதிக உந்து சக்தி யை உருவாக்குகிறது என்பதை கண்டுபிடித்தார்.
காற்றாலைகளில் இருந்து அதிக மின்சாரம் எடுப்பதற்கான ரோடார் வடிவமப்புகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டார். இதற்காக VERTICAL WIND TURBINE ல் பல்வேறு விதமான வடிவமைப்பு மாதிரிகளைக்கொண்டு சோதித்ததில் பக்க கோண காற்றாலை மூலம் அதிக மின்சாரம் பெறலாம் என்பதை கண்டுபிடுத்தார்.
இந்த மாணவர் (2020) ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் ஆய்வில் இளம் விஞ்ஞானி விருதை பெற்றுள்ளார். விமானங்களில் இறக்கைகளின் வடிவமைப்பை பொறுத்து அவற்றின் பறக்கும் வேகம் மாறுபடும். நம் பள்ளி மாணவர் SWEPT மற்றும் DELTA ஆகிய இரண்டு இறக்கை வடிவமைப்புகளை மையமாகக் கொண்டு பத்து விதமான இறக்கை மாதிரிகளை தயார் செய்து, இவற்றில் எந்த இறக்கை மாதிரியின் வேகம் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்தார்.
பொதுவாக நாம் பயன்படுத்தும் எரிபொருட்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் அதிமாக இருக்கும். நம் பள்ளி மாணவன் தண்ணீரில் இருக்ககூடிய ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை மின்னாற் பகுப்பின் மூலம் (RESISTOR EFFICIENCY) பிரித்து அதிலிருந்து பெறப்படும் ஹைட்ரஜனைக் கொண்டு சுற்றுச்சசூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத எரிபொருளை உருவாக்கி மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடித்தார்.
PDF Downloadஇவர் வண்னத்துப்பூச்சியின் அளவில் சிறிய பறக்கும் ரோபோ கண்டுபிடிப்பதை தன்னுடைய குறிக்கோளாக கொண்டுள்ளார். காற்றின் திசை வேகத்திற்கு ஏற்ப வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளின் கோணம் அதிகரிக்கும் போது அது மேலெ உயர பறக்கும். அதனடிப்படையில் பல்வேறு ANGLEகளை உருவாக்கி அதில் எந்த கோணம் காற்றின் திசை வேகத்தில் மேலே உயர பறக்கும் என்பதை கண்டுபிடித்தார்.
இந்த மாணவர் தீயை அணைக்கும் ரோபோ மாதிரி வடிவத்தைக் கண்டுபிடித்தார். தீப்பற்றி உள் நுழைய முடியாத இடங்களில் கயிற்றின் மூலமாக உள்ளே சென்று தீயை அணைக்கும் ரோபோவை கண்டுபிடித்தார். 2018ம் ஆண்டு மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்
PDF Downloadபூக்களிலிருந்து (ரோஸ் மற்றும் இட்லிப்பூ) சாறுகளை எடுத்து சூரிய வெப்பம் மற்றும் IODINE COATED TRANSPARENT GLASS பயன்படுத்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்க்கொண்டார். அதற்காக இவருக்கு தேசிய அளவில் 2020 ம் ஆண்டு முதல் பரிசையும் வளர்ந்து வரும் விஞ்ஞானி என்ற சிறந்த விருதையும் பெற்றார்.
PDF DownloadVERTICAL (செங்குத்து அச்சு) மற்றும் HORIZONTAL (கிடைமட்ட அச்சு) WIND TURBINEகளில் கத்தியின் எண்ணிக்கைகளை இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து என்று வேறுபடுத்தி இவற்றில் எந்த வகையில் அதிக மின்சாரம் மற்றும் மின்னழுத்தம் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்தார்.இந்த ஆண்டு தேசிய அளவில் நடந்த அறிவியல் ஆராய்ச்சியில் இராண்டாம் பரிசு பெற்றார்.
PDF Downloadஇவர் பெரைட் மற்றும் நிமோடிமியம் ஆகிய இவ்விரண்டு காந்தங்களில் எதில் அதிக காந்த ஈர்ப்புத்தன்மை இருக்கிறது என்பதை ஆராய்ந்துள்ளார். இதற்காக 2018ம் ஆண்டு மாநில அளவில் நடந்த அறிவியல் ஆராய்ச்சியில் மூன்றாம் பரிசு பெற்றார்.
PDF Downloadபூக்களின் சாறுகளிலிருந்து வண்ணச்சாயம் தயாரிக்கப்படுகிறது. இதனடிப்படையில் ரோஜாப்பூ, மரிக்கொழுந்து, வெள்ளை செவ்வந்தி மற்றும் மஞ்சள் செவ்வந்தி ஆகிய பூக்களிலிருந்து சாறுகளை எடுத்து அதில் மின்பகுப்பாய்வு செய்து எந்த சாறிலிருந்து அதிகமான மின்சாரம் எடுக்க முடியும் என்பதை ஆராய்ச்சி செய்தார். 2018ம் ஆண்டு மாநில அளவில் நடந்த அறிவியல் ஆய்வில் இவருக்கு முதல் பரிசும் வளந்து வரும் விஞ்ஞானி என்ற விருதும் பெற்றுள்ளார்.
PDF Downloadஇரும்பு , செம்பு , அலுமினியம் ஆகிய உலோகங்களின் துருபிடிக்கும் தன்மையை ஆராய்ந்தார். இதற்காக இவர் கடல் தண்ணீர் , சுத்திகரிக்கப்பட்ட குழாய் தண்ணீர் ,காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் , குழாய் தண்ணீர் ஆகிய நான்கு தண்ணீர்களில் எதில் இவ்வுலோகங்கள் எளிதில் துரு பிடிக்காது என்பதை ஆராய்ந்தார். அலுமினியம் கடல் நீரில் எளிதில் துரு பிடிக்கவில்லை என்று ஆராய்ந்தார்.
PDF Downloadஎலுமிச்சை சாறு, ஆரஞ்சுசாறு, தக்காளி சாறு போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளை உப்பு நீருடன் கலந்து இவற்றில் எந்த பழச்சாறு SALT WATER BATTERYயுடன் வினைபுரிந்து அதிகமான மின்சாரம் கொடுக்கிறது என்பதை கண்டறிந்தார். இவர் தேசியஅளவில் 2020ம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஆய்வில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
PDF Downloadஓமின் விதி இயற்பியலின் அடிப்படையே. பயன்படுத்தி பின் சிறியதாக ஆன பென்சிலின் கிராஃபைட்களை resistor ஆக (மின்தடை தொகுப்பாக) பயன்படுத்தி ஒமின் விதிக்கு இது உட்படுமா என்று ஆராய்ந்தார். இவர் 2018 ம் ஆண்டு மாநில அளவில் பங்கேற்றார்.
PDF Downloadதன்னுடைய ஆய்விற்காக சீனி தண்ணீர் , உப்பு தண்ணீர் , எலுமிச்சை சாறு , மிளகாய் கரைசல் , பாக்கு கரைசல், வேப்பஞ்சாறு ஆகிய அறுசுவை நீரில் எவ்வாறு செடி வளர்கிறது என்பதை ஆய்வு செய்தார். மாநில அளவில் 2018ம் ஆண்டு பங்கேற்றார்.
PDF Downloadதண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் குறைந்த அளவு தண்ணிரைப்பயன்படுத்தி அதனை தக்கவைத்து வளரும் பயிர்களை விவசாயம் செய்வதற்கான வழிமுறையைக் கண்டறிந்தார். இதற்காக தென்னை நார், நெல் வைக்கோல்,நெல் உமில் மற்றும் மரத்தூள் ஆகியவற்றை தனித்தனியாக மணலுடன் கலந்து இவற்றில் எவ்வகை மண் தண்ணீரை அதிகம் தக்க வைக்கிறது என்பதைக் கண்டறிந்தார். 2020ம் ஆண்டு தேசிய அளவில் நடந்த அறிவியல் ஆய்வில் மூன்றாம் பரிசு பெற்றார்,
PDF Downloadகுளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் தேங்கும் தண்ணீரில் கொசு முட்டைகள் உற்பத்தி ஆகும். வீட்டில் எளிதில் கிடைக்கும் இயற்கை மூலிகைகளான துளசி , மிளகு , இலவங்க பட்டை பொடி, சாமந்தி , சாறுகளைக் கொண்டு கொசு முட்டைகள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்தார். மண்டல அளவில் நடந்த அறிவியல் ஆய்வில் 2ம்பரிசு பெற்றார். இவரது ஆராய்ச்சி VELLORE INFORMATION TECHNOLOGY மற்றும் THE HINDU இணைந்து நடத்திய நாளைய விஞ்ஞானி என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 ஆராய்ச்சிகளில் ஒன்றாகும்.
PDF Downloadமீண்டும் இந்த மாணவி மற்றுமொரு புதிய ஆராய்ச்சியை இந்த ஆண்டு தொடர்ந்தார். தண்ணீரில் இருக்கும் நுண்ணுயிர் கிருமிகளை எப்படி அழிப்பது என்ற ஆய்வில் ஈடுபட்டார். அதற்காக அவர் வேப்பஇலை,இனிப்பு துளசி, இழந்தை இலை, பச்சிலை ஆகிய சாறுகளைக் கொண்டு நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும் முறையை ஆராய்ந்தார். 2020 ம் ஆண்டு தேசிய அளவில் பங்கேற்றார்
இரசாயன வொளிர்திறன் பற்றி ஆராய்ச்சி செய்தார் மாணவி. அவர்வெள்ளை, ஆரஞ்சு , மஞ்சள், எலுமிச்சை பச்சை இந்த வண்ண பளபளக்கும் கலர்குச்சிகளை கொண்டும் அறைவெப்பநிலை, வெந்நீர், குளிர்ந்த நீர் ஆகியவற்றின் மூலம் இரசாயன வொளிர்திறனை ஆராய்ந்து உள்ளார். இவர் தேசிய அளவில்நடந்த அறிவியல் ஆய்வில் 2020 ஆண்டு இவருடைய ஆய்விற்கு 2ம்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
PDF Downloadதேவையில்லை என வெட்டி தூக்கி எறியப்படும் கூந்தல் முடிகளை உரமாக்கி அதிலிருந்து செடிவளர்க்கும் முறையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக 15 வயது மேல் உள்ள ஆண்கள் மற்றும் 15 வயது மேல் உள்ள பெண்களிடமிருந்து முடிகளை சேகரித்து மண்ணுடன் கலந்து அதில் மொச்சை விதைகளை போட்டு வளர்த்தார். ஆய்வுவின் முடிவில் ஆணின் முடியில் வேகமாக செடி வளரும் என்பதைக்கண்டறிந்தார். இவருடை சிறந்த ஆய்விற்காக இவருக்கு 2020ம் ஆண்டு தேசிய அளவில் 2ம் பரிசு கிடைத்தது.
PDF Downloadகாப்பர் , அலுமினியம் , எஃகு இவற்றில் எது வேகமாக வெப்பத்தைக் கடத்தும் என்று ஒப்பிட்டு பார்த்து ஆராய்ந்தார். தேசிய அளவில் 2020 ம் ஆண்டு நடந்த அறிவியல் ஆய்வில் பங்கேற்றுள்ளார்.
PDF Downloadமருத்துவத்துறையில் மனிதனுக்கு மெட்டல் ப்லேட் மற்றும் பேஸ்மேகர் வைத்து அறுவைசிகிச்சை மேற்கொள்வர். எந்த மெட்டல் சேர்க்கை (Copper-Lead, Copper-Zinc and Lead-Zinc) மனிதனின் உடலுக்கு ஏற்றது என்ற ஆராய்ச்சியை நான்கு விதமான வயது வரம்புகளுக்கு(Male and Female subjects were selected in each of following age groups; 3-4, 14-15, 20-30 and above 50) உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மேற்கொண்டு Copper-Zinc சேர்க்கைதான் உகந்தது என்பதை கண்டுபிடித்தார்.
PDF Downloadஇந்த மாணவர் கற்றாழை , இளநீர் தண்ணீர், வாழைத்தண்ணீர் ஆகியவற்றில் விதைகளை தனித்தனியாக போட்டு அவற்றிலிருந்து எது வேகமாக வளர்கிறது என்பதை ஆராய்ந்தார் இவர் 2020 ம்ஆண்டு நடந்த தேசிய அறிவியல் ஆய்வில் பங்கேற்றார்.
PDF Downloadகை ரேகை மனிதர்களுக்குள் வேறுபடும். ஒரு மனிதனின் பத்து விரல்களூக்குள் கைரேகை ஒரே மாதிரி இருக்குமா அல்லது வேறுபடுமா? என்று ஆராய்ந்தார். இவர் 20 நபருக்கு கைரேகை ஆய்வு செய்து ஆய்வின் முடிவில் கைரேகை கண்டிப்பாக மாறுபடும் என்பதை கண்டறிந்தார். 2018 ம்ஆண்டு நடந்த தேசிய அறிவியல் ஆய்வில் பங்கேற்றார்.
PDF Downloadஇந்த மாணவர் 2020 ம் ஆண்டும் ஆய்வை தொடர்கிறார். உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்யும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா? என்று ஆய்வு செய்யும் போது பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கண்டறிந்தார்.
PDF Downloadஇந்த மாணவி பின் தங்கி இருந்த உப்புடையார்பட்டி கிராமத்தை தேர்ந்தேடுத்து மக்களின் பண்பாடு, வாழ்க்கை வழிமுறைகளை முழுவதும் கணக்கெடுத்து ஆராய்ந்து தற்போதுள்ள அறிவியல் ஆராய்ச்சிகளில் எவற்றைப் பயன்படுத்தினால் கிராமத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி செல்லலாம் என்பதை கண்டறிந்தார். மாநிலஅளவில் 2018. ஆண்டு பங்கேற்றார்.
சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களில் இயற்கை மற்றும் .செயற்கை சாயத்தைக் கொண்டு பருத்தி மற்றும் நைலான் துணிகளில் எது விரைவில் கலர் வெளுத்துப்போகிறது என்பதை கண்டறிந்தார். மாநில அளவில் 2018ம் ஆண்டு பங்கேற்றார்.
PDF Download